Thursday, November 22, 2012

பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!!



அனைத்து பெண்களுக்கும் பாதங்கள் நன்கு மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அத்தகைய ஆசை இருந்தால் மட்டும் போதாது, முறையாக பாதங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் வீட்டில் நிறைய வேலைகளை செய்வதன் காரணமாக அவர்களால் வீட்டில் எப்போதும் காலணிகளை அணிந்து கொண்டே இருக்க முடியவில்லை. மேலும் சிலர் அழகான நடை வேண்டும் என்பதனால், உயரமான ஹீல்ஸ் போடுவது என்று இருக்கின்றனர்.


ஆனால் ஆண்களின் பாதங்கள் எப்போதும் பெண்களை விட மென்மையாக தான் இருக்கும், ஏனெனில் அவர்களின் பாதங்கள் எப்போதும் ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்கும். ஆகவே அவர்கள் பாதங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பெண்கள் நிறைய பாத பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அத்தகைய பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பாத பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப இனிமேல் நடந்து கொள்ளுங்களேன்...

* குதிகால் வெடிப்பு

ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரும் பாத பிரச்சனைகளில் ஒன்று தான் குதிகால் வெடிப்பு. இருப்பினும் பெண்கள் தான் முக்கியம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் பாதங்களில் அழுக்குகள் அதிகம் இருப்பதாலும், மென்மையிழந்து விடுவிதாலும், வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பாதங்களில் இயற்கையான எண்ணெய் சுரப்பிகள் இல்லை. ஆகவே நாம் தான் தினமும் கால்களுக்கு எண்ணெய்கள் அல்லது ஏதேனும் மாஸ்சுரைசரை அவ்வப்போது தடவ வேண்டும். மேலும் குதிகால் வெடிப்பு இருந்தால், அது போகும் வரை, கால்களை ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்க வேண்டும்.

* பாதத்தில் படை

இந்த நோய் கால்களின் விரல்களுக்கிடையே புண் அல்லது அரிப்பு என்று ஏற்படும். இந்த படை பாதங்களில் நாளடைவில் வெடிப்புகளோடு, பாதத் தோல்களை செதில் செதிலாக ஏற்படுத்தும். ஆகவே தினமும் பாதகளை குளிக்கும் போது நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

* வறண்ட சருமம்: 

எண்ணெய் சுரப்பிகள் பாதங்களில் இல்லாததால் பாதங்களைச் சுற்றி ஒருவித வறட்சி காணப்படும். அதிலும் இத்தகைய வறட்சி குதிகால்களில் தான் அதிகம் காணப்படும். இந்த பிரச்சனைக்கும் அனைவரும் தினமும் பாதிக்கப்படுவர். ஆகவே தினமும் இரண்டு முறை பாதங்களுக்கு மாஸ்சுரைசரை தடவ வேண்டும். அதிலும் காலையில் குளித்ததும், இரவில் படுக்கும் முன்னும் தடவினால் நல்லது. முக்கியமாக அவ்வாறு இரவில் படுக்கும் முன் தடவும் போது, பின்னர் எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள செல்கள் அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும், பின் பாருங்கள் நாளடைவில் பாதங்கள் நன்கு மென்மையாக இருக்கும். வேண்டுமென்றால் தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் சிறிது எண்ணெய் விட்டு குளித்தால், உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

* செருப்பு கடிப்பது:

ஏதேனும் புதிதான காலணிகளை அணிந்தால், அப்போது சருமத்தில் சிவப்பு நிறத்தை அறியலாம். சிலசமயங்களில் புண் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. ஆகவே எப்போது காலணிகளை வாங்கும் போது பாதங்களை இறுக்குமாறு வாங்க வேண்டாம். மேலும் சில நாட்களுக்கு 2-3 மணிநேரம் தொடர்ச்சியாக போடாமல் இருப்பது நல்லது. இதனால் சருமத்தில் புண் அல்லது சிவப்பு நிறம் ஏற்படுவதை தடுக்கலாம்.

* பூஞ்சை தொற்று நோய்: 

பாதங்களில் அதிகமான வியர்வை ஏற்படும் போது பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். அப்போது பாதங்களுக்கு எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தால், பூஞ்சைகளால் தொற்றுநோய் ஏற்படும். மேலும் பெண்கள் பாதங்கள் அழகாக இருக்க நீளமான கால் நகங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் விரல்களின் இடுக்குகளில் எளிதாக பூஞ்சைகள் புகுந்து, நோயை ஏற்படுத்திவிடும். மேலும் அவ்வாறு இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கும் போது, விரல்களில் கடுமையாக வலிகள், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். ஆகவே எந்த ஒரு நோயும் கால் விரல்களின் நகங்களில் ஏற்படாமல் இருக்க, ஸ்பா சென்று அல்லது வீட்டிலேயே சரியாக சுத்தம் செய்தால் தவிர்க்கலாம்.

வேண்டுமென்றால் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஸ்பா சென்று பாதங்களுக்கு சரியான பராமரிப்பு கொடுத்தால், பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

செருப்பு - நபிமார்களின் அணிகலன்!


உச்சியிலிருந்து கரண்டைக்காலுக்கு மேல்வரை துணிகளால் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஒருவன் கால்களுக்கு மட்டும் சற்று வித்தியாசமானதை செருப்பாக அணிந்து கொள்கிறான். அதை அணிந்தே பழக்கப்பட்டவர்கள் அதை அணியாமல் வெளியில் செல்வதை விரும்ப மாட்டார்கள். சுத்தத்தையும், சுகாதாரத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் அதன் அவசியத்தை உணர்ந்தே இருக்கிறார்கள். கோடைக்கால வெயிலில் அதன் உதவி இல்லாவிட்டால் எங்கும் போக முடியாது


கல், கண்ணாடித்துண்டு, முள்களிலிருந்தும், அறுவறுப்பானவைகளிலிருந்தும், நஞ்சுமிக்க விஷப்பூச்சிகளிலிருந்தும் இதன் மூலம் பாதுகாப்புப் பெறுகிறோம். நிராயுதபாணியாக இருக்கும்போது ஒன்றை அடிக்கும் ஆயுதமாகவும் கூட அது பயன்படுகிறது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஆயுதமாகக்கூட அது பயன்படுகிறது என்பதை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ‘புஷ்’ஷின் மீது வீசப்பட்ட செருப்பின் பிரசித்தம் உலகம் அறிந்த ஒன்றாக இருப்பதை எவர்தான் மறக்க முடியும்!
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர் ஹளரத் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு "ஸாஹிபுந் நஃலைன்" -செருப்புக்காரர் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டதை வரலாறு எடுத்துரைக்கின்றது. காரணம் நடப்பதற்காக அவர்கள் நின்றால் செருப்பு அணிவதோடு, அமர்ந்தாலும் தன் கரங்களில் அவற்றைத் தன்னுடன் எப்போதும் வைத்திருப்பார்கள். (மிஷ்காத்)
"செருப்பு நபிமார்களின் அணிகலன்" என்பதாக ஹளரத் இப்னுல் அரபி ரஹ்மதுல்லாஹி அலைஹிகூறுகிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் செருப்பிற்கு இரண்டு மேல் வார்கள் இருந்தன என ஹளரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செருப்பணிந்த விபரத்தை இறைமறையாம் திருக்குர்ஆனே குறிப்பிடுகிறது.
சமீபத்தில் ஒரு பத்திரிகை, மருத்துவப் பேராசிரியர் ஒருவரின் பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் அவர், "வெயிலில் செல்லும்போது குடையில்லாமல்கூட செல்லலாம்; ஆனால், செருப்பு அணியாமல் செல்லக் கூடாது என்றார்.
செருப்பணியும்போதும் நபிவழியில் நாம் நடந்தால் ஒரு சுன்னத்தைக் கடைப்பிடிக்கும் நன்மையும் நமக்குக் கிடைக்கும்.
பெருனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் அருளினார்கள்: "உங்களில் ஒருவர் செருப்பணிந்தால் வலது (காலைக்) கொண்டு ஆரம்பிக்கவும். சுழட்டும்போது இடது (காலைக்) கொண்டு ஆரம்பிக்கவும். காலணி அணிவதில் வலது கால் முந்தவும்; சுழட்டுவதில் பிந்தவும் இருக்கட்டும்" (நூல்: புகாரீ, முஸ்லிம்)
செருப்பைப்பற்றி எழுதும்போது கீழ்காணும் ஹதீஸை சொல்லாவிட்டால் இந்த சிறு கட்டுரை நிறைவடையாது. ஆம்!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் "செருப்பின் வார் அறுந்து போனாலும் அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்."

Foot Care Tips


Feet


Fungal and Bacterial Conditions
Cause:
Shoes worn for longer period due to humidity lead to fungus
Symptoms:
Dry skin, Itching, Peeling, Redness, Blisters
Remedies:
Keep your feet clean and dry – especially the area between your toes
Change your shoes and socks often
Use anti-bacterial talc for feet regularly

Dry skin
Cause:
Age, Improperly fitting shoes, Psoriasis, Thyroid disease, Diabetes, Certain skin conditions, Household heat that reduces humidity and dries out the skin
Remedies:
The problem could be dealt by using moisturizing lotion on the legs and feet everyday.
Make sure feet are well covered before going out in socks.

Corns and calluses
Cause:
They are caused by friction and pressure when the bony parts of your feet rub against your shoes.
Remedies:
It is recommended that you wear shoes that fit better or use special pads.
Corn and calluses cannot be treated at home so see a doctor.

Warts
Cause:
They are generally caused because of viruses. They could be painful and contagious if not treated
Remedies:
Consulting a doctor is the only solution that can burn or freeze the wart without surgery.

Ingrown toenails
Cause:
Ingrown toenails are caused if a piece of the nail breaks into the skin.
Improper cutting of nails also increases the risk of ingrown toe nails
People with large toes typically are prone to this discomfort.
Remedies:
One can prevent this by cutting toenails straight across and level with the top of the toe properly to prevent pus and other complications.
A doctor can remove the part of the nail that is cutting into the skin. This allows the area to heal.

Wednesday, November 21, 2012

Liberty Coolers Exclusive

Men's Footwear



Roony Casual Brown Sandals                  Weinbrenner Light Olive Green Sandals            Liberty Coolers Pristine White SlippersLiberty Coolers Gusty Black Slippers                    Liberty Coolers Trendy Black Slippers            Liberty Coolers Stylish Black SlippersLiberty Coolers Comfy Black Slippers                       Liberty Coolers Relaxing Black Slippers           Liberty Coolers Calmative Black Slippers

Tuesday, November 20, 2012

AERO SOFT CHAPPALS



                                                                    

MCR CHAPPALS ARE AVAILABLE


Soft and comfortable models for men & women are available in various designs, standard sizes and basic colors.





MCP Footwear
High quality MCR chappals, our footwear is idel for  Heel Pains. our footwear is good for  foot against injuries, correct foot problems, save the foot from corns, and post grafted areas.

Healthcare


Footwear is for protecting our foot. Did all footwear which we use today is caring our foot. In this modern world different types of diseases is disturbing people.

In this most one are victim of many type of diseases such as Diabetes, Paralysis, joint-pain, crack in foots, and other foot diseases. This type of diseases can be controlled to an extend by using genuine footwear.

We have to notice some important things when we  selects  footwear. Footwear must be soft , light weight and should with small action in it. We should not use footwear with hard and tight straps and air tight ones.

ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம்..!


ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம்..! 

நவநாகரீக பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் தோன்றுவதற்கு விரும்பி அணிபவை `ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயர்ந்த காலணிகள்.

ஆனால் இந்த `நெட்டைக் கொக்கு’ காலணிகளால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

“குதிகால் உயர்ந்த காலணிகளால் முன்னங்கால்களுக்கு அதிகரிக்கும் அழுத் தமானது மயிரிழை எலும்பு முறிவு, கட்டை விரல் வீக்கம், கால் விரல்கள் முன்புறம் வீங்குவது போன்ற அபாயங்களை ஏற் படுத்துகிறது. `ஹை ஹீல்ஸ்’ அணியும் பெண்களுக்கு பொது வாக மூட்டு வலியும் காணபடுகிறது” என்று கூறு கிறார் மூட்டு சிகிச்சை நிபுணரான அஷிஷ் ஜெயின்.

“காலணியின் அதிக உயரமானது மூட்டு இணைப்புக்கும் அதனுடன் இணைந்த இழை களுக்கும் அதிக கஷ்டத்தை ஏற் படுத்துகிறது. தொடையின் முன்பகுதியில் உள்ள தசை கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. `மூட்டுக் கிண்ணத் தில்’ 26 சதவீதம் அளவுக்கு அழுத்தம் கூடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், மூட்டுகளில் தசை கிழிவது, தசைகள் பாதிக்கபடுவது போன்ற நிலைகள் ஏற்படலாம்” என்கிறார் அவர்.

பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. காலணியின் உயரம் தொடர்ந்து உயர்த்த படும்போது, ஆடுதசை மற்றும் குதிகாலில் இருந்து மேலே செல்லும் `ஆச்சிலஸ்’ இழை போன்றவை சுருங்குகின்றன. தொடர்ந்து குதிகால் உயர்ந்த காலணிகளை அணியும் பெண்களால் சாதாரண செருப்பை அணிய முடியாது போகலாம். சில நேரத்தில் `ஆச்சிலஸ்’ இழையை நீட்டிக்க அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிலநேரங்களில் இறுக்கமான `ஹை ஹீல்ஸ்’ அணியும்போது கால் விரல்கள் பாதிக்க படுகின்றன. தோலை தடிக்கவும் வைக்கலாம். பாத மூட்டுக்கும், கால்விரல்களுக்கும் இடையே உள்ள எலும்புகள், தங்களுக்கு இடையே செல்லும் நரம்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

“தற்போது பெண்கள், ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் வலியை போக்க பாத பகுதியில் `டெர்மல் பில்லர் இன்ஜெக்ஷன்களை’ போட்டுக் கொள்கின்றனர். அது இன்னும் ஆபத்தானது” என்று எச்சரிக்கிறார், தோல் சிகிச்சை நிபுணரான சதீஷ் பாட்டியா.

“ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலைள்ள அந்த ஊசிமருந்துகள் ஆறேழு மாதங்களுக்கு மட்டுமே பயன் தரும்” என்கிறார் இவர்.

குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதால் ஏற்படும் வலியைத் தவிர்பதற்கான ஒரே வழி, அவற்றை அணியாமல் இருப்பதுதான். அது முடியாமல் போனால், ஒரு `இஞ்சு’க்கு மேல் இல்லாத `ஹை ஹீல்சை’ அணியலாம் என்பது மருத்துவர் களின் முடிவான கருத்து.

Monday, November 19, 2012

MONEY PURSE FOR MEN



எங்களிடம் ஆண்களுக்கான மனிபர்ஸ் பல மாடல்களில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.