Saturday, July 15, 2017

Dear All,

Please visit our Facebook page for updated offers..

Jannath Trading Company
Adirai

Tuesday, September 17, 2013

Jannath Trading Company has launched Eid Collection 2013

Jannath Trading Company has launched Eid Collection 2013 on our outlets, This collection has consists of flats, sandals  for ladies, boys and gents  on this Eid festival.


So hurry up, go to the shop and get these attractive Eid collection of your own choice and make your Eid full of enjoyment.
Today’s the top famous footwear in Adirampattinam has offering exclusive variety of footwear designs for children,women and gents i.e. “Jannath Trading Company”. It has unique and stylish chappals & shoes collection from all other footwear brands. As Jannath Trading Company is one of the leading footwear brand and well known.
Metro launches Eid Collection for children,women and gents that have marvelous and elegant shoes with the latest designs. The shoes have different varieties like flat shoes, fancy shoes, sandals, high heel shoes, fancy chappals, wedges etc.

So your wait is over, just visit your nearest Metro Shoes outlet and buy your favourite shoes, bags and other accessories on this Eid, according to your choice. So hurry up, avail this chance and make your Eid festival full of amusement by wearing the Jannath Trading company collections. Order your product at +919443863129 and get the attractive Eid varieties.

Saturday, March 9, 2013

காலணி


காலணி
கதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் காலணி எப்படியிருந்தது என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்டபோது, அவற்றில் இரண்டு வார்ப்பட்டைகள் இருந்தன என்று பதிலளித்தார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)
ஒரு முறை ஸஹாபாக்கள் நபி (ஸல்)அவர்களிடம் அழகான ஆடைகளைகாலணிகளை அணிவதுபெருமையாகுமா என்று கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் “ அல்லாஹ் அழகானவன்அவன் அழகானதையேவிரும்புகிறான்” என்று கூறி விட்டு “ பெருமை என்றால்சத்தியத்தை மறைப்பதும் பிறரை இழிவாக கருதுவதும்” ஆகும்என்றார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அளிஹி வசல்லம் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் "வர்ஸ்" எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள்.        (புஹாரி 5083)


அல்லாஹ்வின் தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் 
என்று கூறினார்கள். நூல் : அஹ்மது 21252

6. இயலாதோருக்கு காலணிகள், பேரீத்தம் பழங்கள்
இயலாதோருக்கு காலணிகள், பேரீத்தம் பழங்கள், துணிமணிகள் தேவiயான பொருட்கள் போன்றவற்றையும் மஹராக வழங்கலாம் என்பதை நபிமொழிகள் அறிவிக்கின்றன.
ஒரு பெண்மணிக்கு காலணிகளை வழங்கி திருமணம் செய்ய அனுமதித்துள்ளார்கள்.
அறிவிப்பாளார்: ஆமிர் இப்னு ரபீஆ (ரலி)
ஆதாரம்: திர்மிதி, அஹ்மத், இப்னுமாஜா

 இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""எவனது இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவனம் புகமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ஒரு மனிதர் ""ஒருவர் ஆடை, காலணி அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் (அது பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ""நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகாக இருப்பதையே நேசிக்கிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்து, மனிதர்களை இழிவுபடுத்துவதுதான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும் ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம்தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.'' (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)

எங்கள் மத்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருநாள் உபதேசம் செய்ய எழுந்து நின்றார்கள். அப்போது, நிச்சயமாக நீங்கள் பாதணி (காலணி) அணியாதவர்களாகவும், நிர்வாணிகளாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்வின் பக்கம் மறுமையில் எழுப்பப்படுவீர்கள் எனக் குறிப்பிட்ட பின்னர், “நாம் ஆரம்பமாக படைத்ததைப் போன்றதொரு நிலைக்கு (உங்களை) மீட்டுவோம்” என்ற திருமறை வசனத்தைக் கூறினார்கள். பின்னர், படைப்புக்களில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக் குறிப்பிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடையத் தோழர்களுக்கு தொழவைத்துக் கொண்டிருந்த போது தன்னுடைய செருப்புகளை கிழற்றி இடது புறத்தில் வைத்தார்கள். இதை (தொழுது கொண்டிருந்த) அக்கூட்டம் பார்த்தபோது அவர்களும் தங்களது காலணிகளை எடுத்து வைத்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்பு உங்களுடைய காலணிகளை கிழற்றி வைக்க உங்களை எது தூண்டியது? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நீங்கள் உங்களது காலணிகளை கிழற்றி வைப்பதை நாங்கள் பார்த்தோம்.


ஆகையால் எங்களது காலணிகளை நாங்கள் கிழற்றிவிட்டோம் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து எனது காலணிகளில் அசுத்தம் அல்லது நோவினை இருப்பதாக சொன்னார்கள் என்று கூறிவிட்டு உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் (தன் காலணிகளை) அவர் உற்று நோக்கட்டும். தன்னுடைய காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினைத் தரக்கூடியதையோ அவர் பார்த்தால் அதை அவர் துடைத்து விட்டு அத்துடன் தொழுதுகொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : அபூதாவுத் (555)

Saturday, February 16, 2013

தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்



"And say to the believing women (...) not to strike their feet (on the ground) so as to make 

known what they hide"

one of the orders of Allah (subhanahu wa ta'ala) for believing women at the end of Ayah 31 

from Surat-un-Nur is that they must not strike their feet (on the ground) so as to make 

known what they hide. what does that mean?


This part of this Ayah is talking about Tinkling Jewelry and Jingling bracelets ‘Loud’ and 

tinkling anything, be it jewelry, bracelets, clip-clopping shoes, high heels, little bells on 

clothes,...if it jingles or makes noise, it is against the principles of Hijaab, because it attracts 

attention to the one wearing it. 



24:31   وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
24:31இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.