Monday, February 4, 2013

காலணி


காலணி என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவைகளுக்காவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும் கழற்றவும் வசதியான செருப்புமிதியடி போன்றவைகளும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடியிருக்கும் ஷூ , பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால ஆன வாரினால் கட்டி, முடிச்சிட்டு ,பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும்.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]வரலாறு

முதன் முதலில் காலில் செருப்பு முதலிய காலணிகள் எப்பொழுது மாந்தர்கள் அணியத் தொடங்கினர் என அறிவது கடினம். ஆனால் எகிப்தியர்கள் கி.மு. 3700 க்கும் முன்னரே காலணிகள் அணிந்தது தெரிகின்றது. அண்மையில் (2010இல்) 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தோலால் ஆன காலணிகள் அர்மேனியக் குகையில் கண்டுபிடித்துள்ளனர்[1] பழங்காலத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களும்கிரேக்கர்களும் ,ரோமானியர்களும் பல்வேறு வகை காலணிகள் அணிந்ததற்கு புடை சிற்பங்களும் பிற தொல்லியல் சான்றுகளும் உள்ளன. சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், துணியால் ஆன செருப்பு வகைகளை பயன்படுத்தினர்.இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்னமே அங்கிருந்த எற்றசுக்கன் மக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும்படியான காலணிகள் அணிந்திருந்தனர். பழங்காலந் தொட்டே கால்களில் காப்பணியாக மட்டும் அணியாமல் ஒரு அழகு அணியாகவும் அணிந்து வந்துள்ளனர்.

பயன்பாடு

பலநிறத்தில் பல்வேறு பொருட்களால் ஆன குதிகால் உயர்த்திய காலணி
மிக அண்மைக்காலம் வரை காலணிகள் விலங்குத் தோலால் செய்யப்பட்டன. ஒருசில மரத்தாலும் ஆனவை. ஆனால் அண்மைக் காலத்தில் தோல் மட்டுமன்றி, தோல் போன்ற பலவகையான செயற்கைப் பொருட்களாலும் பல முரட்டுத் துணிவகைகளாலும், நெகிழிரப்பர் போன்றவைகளாலும் செய்யப்படுகின்றன. ஏழ்மையான நாடுகளில் பலர் எளிமையான காலணிகள் அணிந்தோ அல்லது அணியாமலோ இருந்தாலும், பல நாடுகளில் வாழ்வோருக்கு காலணிகள் இன்றியமையாத ஒரு தேவை ஆகும். அமெரிக்காவில் 1980களில் ஆண்டொன்றுக்கு 350 மில்லியன் காலணிகள் உற்பத்தி செய்தனர். இது தவிர ஐரோப்பாஜப்பான்இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் பகுதிகளையும் எடுத்துக் கொண்டால் உலகில் பில்லியன் கணக்கில் காலணிகள் செய்து விற்கப்படுகின்றன. உலகப் பொருளியலில் (பொருள்முதலியலில்) பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய தொழிலாகும்.

காலணிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்

  • அடையல் (தற்காலத்தில் ஷூ எனப்படும் இனத்தைச் சேர்ந்த காலணி)
  • அரணம் (பெரும்பாணாற்றுப்படையில் "அடிபுதை அரணம்" என ஆளப்பட்டுள்ளது)
  • கழல் (செருப்பு வகை)
  • குத்திச் செருப்பு
  • குறட்டுச் செருப்பு (கால் பெருவிரலை மட்டும் சுற்றி வார் இருக்கும் செருப்பு)
  • தொடுதோல்(கயிறால் கட்டப்படும் காலணி)
  • தோற்பரம் (படையாளிகள் அணியும் கெட்டியான காலணி)
  • நடையன் (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது)
  • மிதியடி (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது எனினும், முன் காலத்தில் மரக்கட்டையால் ஆனது)
  • பாதக்காப்பு
  • அரண்
  • அடிபுனைதோல்

[தொகு]புழக்கத்தில் உள்ள வேற்று மொழிச் சொற்கள்

Sunday, December 16, 2012

விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புல் மீது நடப்பது போன்ற புதுவகையான செருப்புகள்.(படங்கள் )



மென்மையான புல் மீது நடப்பது போன்ற உணர்வை தரும் செருப்புகளை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதன் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. 
இந்த சிறப்பான செருப்பு வகைகளை குசா என்ற நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதில் பயன்படுத்தும் புல், செயற்கையானவை என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த வகையான செருப்புகள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விட்டது. பேஷன் தொழிலில் ஈடுபட்டு வரும் அழகு நங்கையர்களும் இந்த வகை செருப்புகளை அணிந்து கொண்டு மேடையில் வலம் வரத்தொடங்கி விட்டனர்.

Saturday, December 15, 2012

நாங்க எப்படியான செருப்பு வாங்கலாம்



எல்லோரும் செருப்பு காலுக்கு போடுவது வழக்கம் . ஆண்களும் சரி , பெண்களும் சரி செருப்புகளை அணிகிறோம் . வேலைக்கு செல்பவர்கள், தலைவர்கள் எல்லோரும் சப்பாத்து அணிகிறார்கள் . ஒருவரும் வெறும் கால்களுடன் பாதைகளில் நடப்பதில்லை . நாம் மற்றவர்கள் இப்படி போடுகிறார்கள் , அப்படி போடுகிறார்கள் என்று அவர்களை பார்த்து அதை போல் வாங்க கூடாது . நமக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ அதை தான் வாங்க வேண்டும் . அவர் போடுகிறார் அந்தளவு செருப்பு நானும் அதை தான் வாங்குவேன் என்று உங்களது காலுக்கு இறுக்கமானதோ அல்லது உங்கள் காலை விட பெரிய செருப்புகளையோ அணிய கூடாது .



நமக்கு ஏற்ற அளவு , எங்களது காலுக்கு எப்படியான செருப்புகள் அழகாக இருக்கிறது , அதன் தரம் நல்லதா , நீண்ட நாட்களுக்கு பாவிக்க கூடியதாக இருக்கிறதா என முக்கியமாக பார்த்து வாங்க வேண்டும் . ஆண்களானாலும் , பெண்களானாலும் இதனை முதலில் கடைப்பிடிக்க வேண்டும் . விலை அதிகம் இருந்தாலும் நல்லதாக செருப்பு இருக்க வேண்டும் . நான்கு , ஐந்து அடி நடந்து பார்த்து எமது காலுக்கு பொருத்தமாக , சரியாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும் .

இப்போதெல்லாம் முன்னைய காலங்களை போல் செருப்புகளை நீண்ட நாட்களுக்கு பாவிக்க முடிவதில்லை . ஒட்டிய பசை கழன்று விடும் , தைத்த தையல் விட்டு விடும் , செருப்பு வெடித்து விடும் , ஹீல்ஸ் கழன்று விடும் இப்படி பல பிரச்சனைகள் உண்டு . செருப்புகளை டசின் கணக்கில் வைத்திருப்போரும் உள்ளனர் . தமது உடுப்புக்கு ஏற்ற கலரில் காலில் செருப்புகள் அணிவோரும் உண்டு .

பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம். 
செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும். 
ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன. 
இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.

Thursday, December 6, 2012

பாரடைஸ் லைனிங் & பேக் வோர்க்ஸ்.


பாரடைஸ் லைனிங் & பேக் வோர்க்ஸ்.

அல்லாஹ்வின் உதவியால் கடந்த 10 வருட கால மாக எமது அதிரையில் மிக சிறப்பான முறையில் புதிய சோஃபா, மற்றும் இன்னும் பல சேவைகளை செய்து வருகின்றோம் என்பதை தெரிவித்துகொள்கின்றோம். அல்ஹம்துலில்லஹ்.


சிறப்பு அம்சங்கள்.
  • எங்களிடம் சைக்கில், பைக், ஆட்டோ மற்றும் கார்ளுக்கான சீட் கவர்.

  • ஆட்டோ டாப் ரேக்ஸீன் 

  • பைக் சேஃப்ட்டி கவர் (safety cover) தைத்து தரப்படும்
  • ஆடரீன் பேரில் ஸ்கூல் பேக், டிராவல் பேக் தயார் செய்து தரபடும்.
  • ஸ்கூல் பேக் ரிப்பேர் செய்து தரப்படும் எனப்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிரோம்.
  • வீட்டு ஜன்னல்களூக்கான கர்டைன் (curtain) தைத்து தரப்படும்.
Click to Enlarge
  • IRON Box Table Clothes & Dining Table Clothes
 


TAILORING & DESIGNING

ABU MOHAMED YUSUF NOOR AHMED IBN ISHAK HAJIYAR.
Propriter : Jannath Trading Company & Paradise Lining & Bag Works
                Sethu Road, Adirampattinam - 614 701
                Tanjore Dist. Tamil Nadu.
                Mobile: +91 944 38 63129.

விரைவில் இன்ஷா அல்லாஹ்